பிக் பாஸ் சீசன் 8 : முத்துக்குமரன் வெற்றியாளராக தேர்வு...!



பிக் பாஸ் சீசன் 8 போட்டியின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது பிக் பாஸ் சீசன் 8. இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலம். கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் தான் தொகுத்து வந்தார். இந்த சீசனில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி பொறுப்பேற்று நடத்து வந்தார்.


இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், முத்துக்குமரன், ஜாக்லின், செளந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜே விஷால், ஆர்.ஜே. ஆனந்தி, சுனிதா, ரஞ்சித், தர்ஷா குப்தா, சஞ்சனா, அக்‌ஷிதா, அர்னாவ், சத்யா மற்றும் தீபக் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றார்கள். கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. இதன் இறுதியில் முத்துக்குமரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த இறுதி நிகழ்ச்சி இன்று மாலை ஒளிபரப்பாக உள்ளது. ஆனால், இந்த இறுதிப் போட்டியில் முத்துக்குமரன் வெற்றி பெற்றிருப்பது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை வைத்து பலரும் முத்துக்குமரனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதே வேளையில். அவருடைய பி.ஆர் பணிகள் குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதர இறுதிப் போட்டியாளர்களின் ஆதரவாளர்களும் முத்துக் குமரனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post