சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!



இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்திய அணியின் முதல் தலைவர் சி.கே.நாயுடுவை கௌரவிக்கும் விதமாக இந்த விருது உருவாக்கப்பட்டது. இதுவரையில் 30 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த விருதினைப் பெறும் 31-வது நபராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மாறியுள்ளார்.

1989 ஆம் ஆண்டு தனது 16 வயதில் இந்திய அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post