இலங்கை மத்திய வங்கியின் பெயரில் பண மோசடி: பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!



இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் நடத்தப்படும் பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் என கூறி, தற்போது ஒன்லைனில் ஒரு மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விளம்பரத்தில், வீட்டிலிருந்து பணியாற்ற ஸ்மார்ட்போன் அல்லது கணினி மட்டுமே தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தத் திட்டத்திற்கு வட்ஸ்அப் மூலம் இணைய முடியும் எனவும், பகுதிநேர வேலையின் மூலம் நாளொன்றுக்கு 17,500 முதல் 46,000 ரூபாய் வரை எளிதாக சம்பளமாக பெற முடியும் எனவும் மோசடியான விளம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் முடிக்கப்பட்ட ஒவ்வொரு பணிக்கும் 1500 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் 3 நிமிடங்களில் தங்கள் தரகு பணத்தை பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய ஒரு குறிப்பிட்ட கணக்கில் 2,000 வைப்பு செய்ய வேண்டும் எனவும், அதன் பிறகு மோசடியாளர்கள் அவர்களுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி இணைப்பை துண்டிப்பார்கள் எனவும் மோசடி குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுள்ளதாக செய்யப்படும் இந்த மோசடியான விளம்பரத்தில் சிக்கிய பெருமளவானோர் பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post