வான் கதவுகள் திறக்கப்பட்டது…!!



தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் தலா ஐந்து அடி வீதமும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post