சுதந்திர தின ஒத்திகை நாளை முதல்...!



இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நாளை (29) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நாளை காலை 8:00 மணிக்கு ஒத்திகை நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது.

“தேசிய மறுமலர்ச்சிக்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் இவ்வருட சுதந்திர தின விழாவை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் சிவில் தற்காப்புப் படை அணிவகுப்புக்கள் நடைபெறவுள்ளன.

அதன்படி நாளை முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஒத்திகைக் காலத்தில் குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவுகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.

ஜனவரி 29, 30, 31 மற்றும் பெப்ரவரி 01, 02 ஆகிய திகதிகளில் காலை 06.00 மணி முதல் மாலை 12.00 மணி வரை ஒத்திகை பணிகள் நடைபெறும் என்பதால், இந்த போக்குவரத்து திட்டம் கொழும்பு போக்குவரத்து பிரிவால் செயற்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post