பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பெண்கள் - பிரதமர் ஹரிணி...!

 


2023ம் ஆண்டு ஐந்து பில்லியன் ரூபாவை அண்மித்த பொருளாதார பங்களிப்பை வழங்கிய ஆடைத் தொழிற்துறையில் 2025ம் ஆண்டில் 8.5 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, பிரதியமைச்சர் ச்சதுரங்க அபேசிங்க, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்க் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

ஆடைத் தொழிற்துறையில் 35000க்கும் அதிகமான பெண்களின் பங்குபற்றலைக் கொண்டுள்ள ஆடைத் தொழிற்துறையின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு கிடைக்கப்பெறுகின்றது.

கடந்த காலங்களில் ஏற்ப்பட்ட நெருக்கடியுடன் பல சவால்களுக்கு குறித்த தொழிற்துறை முகம்கொடுத்தத. சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் உட்பட ஏற்றுமதி துறையில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆடைத் தொழிற்துறையில் தொழிற் படையணிக்கென தொழிற் பயிற்சி பணியாளர்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post