டொனால்ட் டிரம்ப் நிபந்தனையின்றி விடுதலை...!



ஆபாச நடிகைக்கு பணம் அளித்த வழக்கில் இருந்து அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார்.

2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் நியூயோர்க் நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை வெளியிடுவதாக தெரிவித்திருந்தது.

ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் டிரம்பின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது.

அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு அவர் ஒருவேளை சிறை செல்ல நேரிட்டால் அவரால் அதிபராகப் பதவியேற்க முடியுமா என்பதில் பலருக்கும் கேள்வி எழுந்ததுடன் டொனால்ட் டிரம்ப் நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் இன்று பண மோசடி வழக்கில் நிபந்தனையின்றியும் அவருக்கு சிறைத்தண்டனை, அபராதம் எதுவுமின்றியும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் 10 நாள்களில் அதிபராகப் பதவியேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post