குற்றப்பத்திரிக்கை தாக்கல்...!



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரக்பி விளையாட்டின் அபிவிருத்திக்கென இந்திய கிரிஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இவ்வாறு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே குற்றப் புலனாய்வு பிரிவினால் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆவணங்களை முன்வைத்திருந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்ஷ சந்தேக நபராக கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

Post a Comment

Previous Post Next Post