HMPV வைரஸ் தாக்கத்துக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை…



சீன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வைரஸ் தாக்கம் காரணமாக சுவாச மண்டலம் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்த வைரஸ் தொற்றுறுதியானவர்களுக்கு இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு திணறல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பரவல் காரணமாக சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்களே அதிகளவில் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகிறது.

எச்.எம்.வி.பி என அறியப்படுகின்ற குறித்த வைரஸ் பரவலை அடுத்து சீனாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post