பாடசாலை மாணவர்களை வெயிலில் விட வேண்டாம்...!

 பாடசாலை மாணவர்களை வெயிலில் விட வேண்டாமெனவும், அவர்கள் இன்றைய வெப்பமான வானிலையில் பாதிக்கப்படக்கூடாதென கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

இல்லங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கான வழிகாட்டல்களை உள்ளடக்கிய சுற்றுநிரூபமொன்றை அமைச்சு வெளியிடுமென கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ கூறியுள்ளார்.

தவிர, பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் காலமும் வெப்பமான வானிலையால் குறைக்கப்பட வேண்டுமென்றவாறான கருத்துகளை கலுவெவ வெளிப்படுத்தியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post