ஊழல் ஆட்சி, பலவீனமான பொருளாதார கொள்ளை மற்றும் பொறுப்பற்ற நிர்வாகம் என்பன நாடு எதிர்கொண்ட நெருக்கடிக்கு காரணமென ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வரவு செலவு திட்ட உரையின் ஆரம்பத்தில் தெரிவித்தார்.
மக்கள் வரிசைகளில் உயிரிழக்க நேரிட்டமைக்கு இதுவே காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார். 2022 பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் மக்கள் மிகவும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சமூக பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டுள்ள இந்த வரவு செலவு திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுடன் பொருளாதாரத்தை பலப்படுத்தவதற்கு சர்வதேசத்துடன் பலமான உறவுகளை கட்டியெழுப்புவதற்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெல்வதற்கும் நாம் முன்னிலையாகியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
Post a Comment