பதவியை துறக்க தயார் ; உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு...!

 

உக்ரைனின் நேட்டோ உறுப்புரிமைக்காக தனது ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

பல தசாப்தங்களாக பதவியில் இருப்பது தனது கனவு அல்ல எனவும், இப்போது உக்ரைனின் பாதுகாப்பு தொடர்பிலேயே தான் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார். 

நாளை உக்ரைனில் நடைபெறும் கூட்டத்தில் சில "வலுவான முடிவுகள்" எடுக்கப்பட உள்ளதாகவும், மேலும் ரஷ்யாவிற்கு எதிரான ஆதரவு மற்றும் தடைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தலைவர்களுடன் ஒரு தனி சந்திப்பு நடத்தவுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

இதுவொரு விளையாட்டு பொருள் அல்ல, போர் எனவே எங்களுக்கு கூட்டாண்மை தேவை, எங்களுக்கு உதவி தேவை, ஆனால் அதற்காக எமது சுதந்திரத்தை இழக்க முடியாது, எங்களது கண்ணியத்தை இழக்க முடியாது. 

ஐரோப்பியத் தலைவர்களுடனான நாளைய உக்ரைனின் சந்திப்பு ஒரு "திருப்புமுனையாக" இருக்கும் என்று நம்புவதாகவும் செலென்ஸ்கி குறிப்பிட்டார். 

Post a Comment

Previous Post Next Post