எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ள முஹம்மது யூனுஸ்...!

 


ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கை பங்களாதேஷிற்கு வருகை  தருமாறு அந்நாட்டின் இடைக்கால பிரதமர் முஹம்மது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

 

 இதன்படி முஹம்மது யூனுஸ் வெளியிட்ட கடிதத்தில் எலான் மஸ்க் பங்களாதேஷிற்கு வருகை தருவதன் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களினுாடாக பங்களாதேஷின்  இளைஞர்களுக்கு வளமையான எதிர்காலத்தை உருவாக்க இருதரப்பும் இணைந்து செயல்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்


 

இதனைத் தொடர்ந்து, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செய்ற்கை கோள் தொழில்நுட்பமான ஸ்டார் லிங்கை பங்களாதேஷின் உட்கட்டமைப்பில் அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்நாட்டின் இளைஞர்கள், விளிம்புநிலை பெண்கள் மற்றும் பின்தங்கிய சமூகத்தினருக்கு மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.


 

இந்நிலையில், அடுத்த 90 நாட்களுக்குள் ஸ்டார் லிங்க் சேவையை பங்களாதேஷில் ஆரம்பிக்க , அந்நாட்டு அரசின் உயர் அதிகாரியான கலீலுர் ரஹுமான் என்பவரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை உருவாக்கிட யூனுஸ் நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post