ரஷ்யாவிற்கு 50 நாட்கள் கெடு...!!



யுக்ரைன் உடனான போரை, 50 நாட்களில் முடிவுக்குக் கொண்டு வராவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிகை விடுத்துள்ளார்.

புடினின் போர் நடத்தை ஏமாற்றம் அளிக்கிறது எனவும், ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அடுத்த 50 நாட்களுக்குள் யுக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு புடின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் எனவும், நாங்கள் 2ஆம் கட்ட வரிகளை விதிக்க திட்டமிட்டு வருகிறோம் என்றும் ட்ரம்ப் எச்சரிகை விடுத்துள்ளார்.

மேலும், எங்களுடன் இந்த ஒப்பந்தம் ஏற்படவில்லையென்றால், 100 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post