உணர்வுபூர்வமான தகவல்களை ஊடகங்களில் வெளியிடும் போது சிந்தித்து செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள், சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை பொலிஸ் ஊடகப் பிரிவு தினமும் ஊடகங்களுக்கு வெளியிடுகிறது.
இவ்வாறான தகவல்களை செய்திகளாக வடிவமைக்கும் போது ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய நபர்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்.
பொதுமக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய தகவல்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
உணர்வுபூர்வமான தகவல்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர் இரு தடவைகள் சிந்தித்து, பின்னர் அந்த தகவல்களை ஊடகங்களில் வெளியிடுங்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
Post a Comment