
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, மாநியங்கள் அல்லது உதவிகளை வழங்குவதாக கூறி, தனி நபர்களிடமிருந்து பண மோசடி செய்யும் நபர் தொடர்பில் இலங்கை மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள உத்தியோப்பூர்வ அறிவிப்பில்,
சம்பந்தப்பட்ட நபர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, குறிப்பாக இளம் தொழில்முனைவோருக்கு மானியங்கள் அல்லது நிதி வழங்குவதாகக் கூறுவது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த நபர் பொய்யான வாக்குறுதிகளின் பேரில் தனிநபர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு பின்னர் காணாமல் போவதாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு மோசடி என்பதை நினைவில் கொள்ளவும்!
அனைத்து ஐரோப்பிய ஒன்றிய மானியங்களும் ஒப்பந்தங்களும் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தேர்வு செயல்முறைகளைப் பின்பற்றி மாத்திரமே வழங்கப்படுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத் தேர்வு மற்றும் விருது நடைமுறைகள் முகவர்கள் போன்ற மூன்றாம் தரப்பினரின் சேவைகளை நிதியுதவியை எளிதாக்க ஒருபோதும் அனுமதிக்காது.
மேலும், சமர்ப்பிக்கப்பட்ட மானிய முன்மொழிவுகள் அல்லது கொள்முதல் டெண்டர்களைச் செயல்படுத்த தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து எந்தப் பணத்தையும் ஒருபோதும் கோராது.
இதுபோன்ற மோசடிச் செயல்பாட்டை நீங்கள் சந்தித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு அளிக்குமாறு வலியுறுத்துகிறோம் என்று ஐரேபாப்பிய ஒன்றியம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment