நாகபட்டினம்-காங்கேசன்துறை கப்பல் பயணத் திட்டம்: கட்டண விவரங்கள் அறிவிப்பு!



நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு, காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே கப்பல் சேவையில் ஈடுபடும் பயணிகளுக்காக விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான நிறுவனப் பணிப்பாளர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்.

ஜெயசீலன் மேலும் கூறுகையில்,

தற்போது காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே கப்பல் வழியாக போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு இருவழி கட்டணமாக 28 ஆயிரத்து 300 ரூபாவும், காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் செல்வதற்கு ஒருவழி கட்டணமாக 12 ஆயிரத்து 300 ரூபாவும், நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வருவதற்கு ஒருவழி கட்டணமாக 16 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படுகிறது.

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு எங்கள் பயணிகளுக்காக விசேட சலுகைகளை வழங்கும் திட்டமுள்ளது. அந்த சலுகைகள் தொடர்பான முழுமையான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்.

மேலும், தற்போது கப்பல் சேவை செவ்வாய்க்கிழமை தவிர்ந்த அனைத்து நாள்களிலும் வழக்கம்போல இடம்பெற்று வருகின்றது. சேவையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அவை தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post